நடிகை அல்போன்ஸா தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் கவர்ச்சி நடிகையாக பாடல்களில் நடனமாடியுள்ளார். பாட்ஷா படத்தில் அறிமுகமான அவருக்கு அதன் மூலம் மிகப்பெரிய பிரேக் கிடைத்தது. அடுத்தடுத்து நாடோடி மன்னன், ரட்சகன், மாண்புமிகு மாணவன், சொல்லமலே என 50க்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி நடனம் ஆடினார்.
இவர் நசீர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்கள் திருமண வாழ்வு நீண்ட் நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தை பிறந்த பின்னர் இருவரும் விவாகரத்து செய்தனர்.
அதன் பின்னர் தனிமையில் வாழ்ந்த அல்போன்ஸா தனது சகோதரர் ராபர்ட்டின் நண்பரான வினோத் குமார் எனபவரை காதலித்ததாகவும், அவர்கள் இருவரும் திருமனம் செய்துகொள்ளாம்ல ஒன்றாக வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் தன்னை திருமணம் செய்து கொள்ள வினோத் வற்புறுத்தியதாகவும் ஆனால் கணவரை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்ய முடியாது என்பதால் காத்திருக்க அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வினோத் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. வினோத்குமார் இறப்பதற்கு முன்னால் கவசம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அவர் இறந்ததுதான் சோகம்.
ஆனால் வினோத் குமாரின் குடும்பத்தினரோ அவரை அல்போன்ஸாதான் அடித்தே கொன்று விட்டதாக குற்றம்சாட்டினர். இதற்கிடையில் அல்போன்ஸா தூக்க மாத்திரைகளை தின்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.
இது சம்மந்தமாக அல்போன்ஸா மீது வழக்கு ஒன்றும் நிலுவையில் இருந்த நிலையில் அவர் திடீரென காணாமல் போனார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. இந்த தற்கொலை வழக்கால் அவர் பெயர் காலியான நிலையில் அதன் பின்னர் அவருக்கான சினிமா வாய்ப்புகளும் வரவில்லை.
