சின்னத்திரை நடிகையான ஹரிப்பிரியா கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து பிரியமானவளே, கண்மணி உள்ளிட்ட பல சீரியல்களின் நடித்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகரான விக்னேஷ் குமார் என்பவரை ஹரிப்பிரியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

தற்போது இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் ஹரிப்பிரியா சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார். சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் ஹரிபிரியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வெக்கேஷன்காக பாலி நடிகை ஹரிப்பிரியா நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எப்போதும் சேலையில் பார்த்த ஹரிப்பிரியாவை இப்போது மார்டன் உடையில் பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.
View this post on Instagram
