கழுத்தில் தொங்கும் மஞ்சள் தாலியுடன்.. கியூட் லுக்கில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஆலியா மானசா… Gorgeous பிக்ஸ்…

By Begam

Published on:

சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார்.

   

முதல் சீரியலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் பிரபலமான சீரியல் நடிகையாக மாறினார். இதே சீரியலில் ஹீரோவாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து ‘ராஜா ராணி 2’ சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார். இவர்களுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.

மீண்டும் ஆல்யா, எப்போது நடிப்பால் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்பொழுது இவர் தனது உடல் எடையை வெகுவாக குறித்து தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார்.

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘இனியா’ சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

நடிகர் சஞ்சீவ் இதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்பொழுது நடிகை ஆலியா மானசா இனியா தொடரில் வரும் கெட்டப்பில் தாலியுடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படத்தை இணையத்தில் பகிர, இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.