மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சமுத்திரகுமாரியாக பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தார்.
தமிழில் விஷால் நடித்த ஆக்சன் திரைப்படம் மூலமாக நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.
அதன்படி கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது இவர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கோதா என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
கார்கி, கேப்டன் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கதாநாயகியாக மட்டுமல்லாமல் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். அதாவது சாய்பல்லவி நடித்த கார்கி திரைப்படத்தை இவர்தான் தயாரித்திருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த பூங்குழலி கதாபாத்திரம் இவருக்கான ஒரு அடையாளத்தை கொடுத்தது.
மலையாளத்தில் நாக் அவுட் மற்றும் குமாரி, தெலுங்கில் அம்மு என அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த ஆண்டில் அதிகமான படங்களில் நடித்தவர் என்ற பெருமையையும் ஐஸ்வர்யா லட்சுமி தட்டிச் சென்றார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதன்படி தற்போது கிளாமர் உடையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.