Categories: சினிமா

தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகரின் வீட்டில் குடியேறிய சிம்பு பட நடிகை.. வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா..?

Spread the love

பாலிவுட் நடிகை சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் நடிகை அதா சர்மா வாடகைக்கு சென்று இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக வளம் வந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் சின்ன சின்ன அசைவுகளை கூட திரையில் காட்டி தோனி ரசிகர்களை கவர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வளம் வந்தார்.

நல்ல படங்களில் நடித்து வந்த இவர் திடீரென்று 2020 ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு காரணம் பாலிவுட் நேபோட்டிசம் தான் காரணம் என பலரும் கூறி வந்தார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து உடற்கூறாய்வு முடிவுகளில் சுஷாந்த் சிங் தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் இவரின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அவரின் தங்கை ஸ்வீத்தா சிங் கீர்த்தி தனது சகோதரனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகின்றார். இவரது மரணமே தற்போது வரை மர்மமாக இருக்கும் வகையில் அவரது வீட்டிற்கு நடிகை அதா சர்மா குடியேறி இருக்கின்றார்.

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு போலீஸ் கேஸ் என்று சுஷாந்த் சிங் குடியிருந்த வீடு பூட்டியே இருந்தது. இந்நிலையில் நடிகை அதா ஷர்மா தனது பாட்டி மற்றும் அம்மாவுடன் அந்த வீட்டிற்கு குடியேறி இருக்கின்றார், இந்த வீட்டின் வாடகை மட்டும் 4 லட்சம் எனக் கூறப்படுகின்றது. நடிகை அதா சர்மா பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமாக வலம் வருகிறார்.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஹார்ட் அட்டாக் என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தமிழில் சார்லி சாப்ளின் 2 என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் அந்த வீட்டிற்கு குடியேறி வெளியிட்ட வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

“தட்டி தடுமாறும் விஜய்”…. திமுக-வின் ரகசிய மூவ்.. அறிவாலயத்தில் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பைக்…

1 minute ago

அதிர்ச்சி..! காங்கிரஸ் பெண் MLA-வை கட்டிப்பிடிக்க பாய்ந்த மூத்த நிர்வாகி… கட்சித் தலைமையகத்திலேயே இப்படியா..? வலுக்கும் கண்டனம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அரங்கேறிய ஒரு விரும்பத்தகாத…

6 minutes ago

அவ்வளவுதான் சோலி முடிஞ்சது… “ஒருத்தரும் போகக்கூடாது”… திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு….!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி நீடித்து வருவது அரசியல் களத்தில்…

7 minutes ago

நாளைக்கே விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறேன்… இதை உடனே செய்யுங்க.. ஆளுநரின் திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் பரபரப்புத் திருப்பம்..!!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை குறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,…

12 minutes ago

“சி.வி. சண்முகம் திடீர் ராஜினாமா”… ரிசார்ட்டில் 40 எம்எல்ஏக்கள்… நள்ளிரவில் புதுச்சேரிக்கு விரைந்த இபிஎஸ்.. தமிழகத்தில் மீண்டும் ‘கூவத்தூர்’ பாணி அரசியலா….?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில அரசியல் களம் புதுச்சேரியை நோக்கி…

12 minutes ago

உச்சகட்ட பரபரப்பு..! பதவியை ராஜினாமா செய்யும் தவெக MLA-க்கள்…? மக்களின் தீர்ப்பிற்கு துரோகம்… தமிழக அரசியலில் வெடிக்கப்போகும் அடுத்த அணுகுண்டு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டப்பேரவை' (Hung Assembly) அமைந்திருக்கும் சூழலில், 108 இடங்களைப்…

14 minutes ago