தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத ‘தொங்கு சட்டப்பேரவை’ (Hung Assembly) அமைந்திருக்கும் சூழலில், 108 இடங்களைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளைத் தனது கூட்டணிக்கு அழைத்து விஜய் மெஜாரிட்டியை நிரூபிக்க முயன்றாலும், ஆளுநர் கோரிய 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை அளிக்க முடியாததால் ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தவெக-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கப் பரஸ்பர எதிரிகளான திமுக மற்றும் அதிமுக ஒன்றிணைந்து ‘மெகா கூட்டணி’ அமைத்து ஆட்சி அமைக்க ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
திமுக – அதிமுக ஆகிய இரு பெரும் துருவங்களும் கூட்டணி சேரப்போவதாக வெளியாகும் தகவல், தவெக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை மக்களின் தீர்ப்பிற்கு எதிராகத் தார்மீக நெறிகளை மீறி இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால், ஜனநாயகப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தவெக எம்.எல்.ஏ-க்கள் 108 பேரும் ஒட்டுமொத்தமாகப் பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் இந்த ‘அணு ஆயுத’ நடவடிக்கை தமிழக அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை நோக்கி மாநிலத்தைத் தள்ளும் சூழலையும் உருவாக்கியுள்ளது.
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…