தமிழ் நடிகைகள் உங்க கண்களுக்கு தெரியவில்லையா…? மாரி செல்வராஜின் கருத்து…! ஆதங்கத்தை வெளிபடுத்திய பிரபல நடிகை…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2025

Spread the love

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான பைசன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அறிமுக இயக்குனர் இயக்கத்தில் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை ஆராத்யா, இயக்குனர் மாரி செல்வராஜை பார்த்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறும் போது, மாரி செல்வராஜ் சாரின் ஒரு நேர்காணலை பார்த்திருப்போம். அதில் அவர் நான் ஒரு அர்ப்பணிப்பு உள்ள நடிகைகளை தான் என் படங்களுக்கு தேர்ந்தெடுப்பேன் என கூறினார். அது மலையாளி அப்படியெல்லாம் பார்ப்பதில்லை. அர்ப்பணிப்புடன் இருந்ததால் நான் தேர்ந்தெடுத்தேன் எனக் கூறினார்.

   

இங்கு தமிழில் அர்ப்பணிப்போடு உள்ள நடிகைகள் இருக்கிறோம் சார். நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு உழைப்பை போடுகிறோம். அது உங்களுடைய கண்களுக்கும், காதுகளுக்கும் வந்து சேரவில்லை. அதை எப்படி சேர்ப்பது என்றும் எங்களுக்கு தெரியவில்லை. அர்ப்பணிப்போடு உள்ள நடிகைகள் தமிழிலும் இருக்கின்றோம் என ஆராதியா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.