நடிகர் விஜயகுமாரின் பேத்திக்கு இந்த மாதம் டும் டும் டும்.. தியா திருமணம் செய்ய போகும் இந்த பிரபலம் யார் தெரியுமா..?

By Begam

Updated on:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சினிமா குடும்பம் என்றால் அதில் நடிகர் விஜயகுமாரின் குடும்பமும் ஒன்று.

   

நடிகர் விஜயகுமார் தொடங்கி அவரது மனைவி, மகன், மகள்கள் என அனைவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள். பல்வேறு வெற்றி படங்களை இந்த குடும்பத்தினர் திரையுலகத்திற்கு கொடுத்துள்ளனர்.

அருண் விஜய் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும், அவரது சகோதரிகள் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். இவர்களில் வனிதா மட்டும் அவ்வப்பொழுது சர்ச்சைகள், சண்டைகள் என ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

மற்ற சகோதரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜயின் சகோதரியுமான, அனிதா விஜயகுமாரின் மகள்தான் தியா.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் அடிவாக இருக்கக்கூடியவர் தியா. இவர் தற்பொழுது லண்டனில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் ஹீரோயினாக களமிறங்குவார் என்றும் இணையத்தில் வைரலாக பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான அனிதாவின் மகள் தியாவுக்கு டிலன் மிஸ்ட்ரி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் வனிதா விஜயகுமாரை தவிர, விஜயகுமாரின் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். நிச்சயத்தை தொடர்ந்து இந்த மாதம் அவருக்கு திருமணம் என்றும் கூறப்படுகிறது.

தற்பொழுது இவரைப்பற்றிய தகவல்கள் தான் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி இவர் அமெரிக்காவில் உள்ள மிகப்பிரபலமான University of liverpool ல் surgical மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பை படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  மேலும் இவரைப்பற்றிய தகவல்கள் நமக்கு அவ்வளவாக தெரியவில்லை.