பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளருக்கு ஹீரோயினாக களமிறங்கும் நடிகை சுரேகா வாணியின் மகள்.. வெளியான பட பூஜை ஸ்டில்ஸ்..

By Begam

Updated on:

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சுரேகா வாணி. சுமார் 18 வருடங்களாக 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது காரியரை ஆரம்பித்தவர். 2003 இல் தெலுங்கு சினிமாவில் நடிகையானார். 2010ல் சுரேகா வாணி உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

   

அதன் பிறகு இவர் எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல், விஸ்வாசம், லிசா, மாஸ்டர் என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2019 ல் கணவர் சுரேஷ் தேஜா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணம் அடைந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு தற்பொழுது 20 வயது ஆகிறது.

தற்போது தன்னுடைய மகளுடன் சுரேகா வாணி வசித்து வருகிறார். கணவர் இல்லாமல் தன்னுடைய குழந்தையை தனியாக வளர்த்து தற்போது ஹீரோயி ரேஞ்சுக்கு வளர்த்திருக்கும் நடிகை சுரேகா வாணி தன்னுடைய மகளை ஹீரோயின் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். தொடர்ந்து தனது இணையதள பக்கத்தில் போட்டோஷூட் நடத்தி படவாய்ப்பு தேடிய இவருக்கு தற்பொழுது படவாய்ப்பும் கிடைத்துள்ளது.

அதாவது இவர் தற்பொழுது தெலுங்கு பிக் பாஸ் ரன்னர் அப்பான நடிகர் அமர்தீப் உடன் புதிய திரைப்படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கான பூஜையும் சமீபத்தில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் பூஜை விடியோவானது தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…