தனிக்காட்டு ராஜாவாக மாறிய யோகி பாபு.. இருந்தாலும் இப்படி எல்லாம் பண்ணக்கூடாதுல்ல.. கடுப்பில் ப்ரொடியூசர்ஸ்..!

By Mahalakshmi on ஆனி 3, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதன் பிறகு சிறிய சிறிய காமெடி காட்சிகளின் நடித்து தற்போது முன்னணி நட்சத்திர திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் எந்த திரைப்படம் என்றாலும் நடிகர் யோகி பாபுவை பார்க்கலாம்.

   

அந்த அளவுக்கு திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகின்றார். கோலமாவு கோகிலா, மண்டேலா உள்ள திரைப்படங்கள் இவரது நடிப்பில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன், ஜெயிலர் திரைப்படங்களிலும் படித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படத்திலும் அறிமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

   

 

தற்போது பல படங்களை கையில் வைத்திருக்கும் யோகி பாபு குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றது. அதாவது இதற்கு முன்னதாக சூரி , சந்தானம் போன்ற நடிகர்கள் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்தார்கள். சந்தானம் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் சூரியின் தற்போது விடுதலை கருடன் என அடுத்தடுத்து திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த வருகின்றார்.

இதனால் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு யோகி பாபு மட்டும் இருப்பதால் எல்லா படங்களிலும் அவரை நடிப்பதற்கு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் யோகி பாபு சம்பளத்தை அதிக அளவில் கேட்கிறார். அப்படியே சம்பளம் அதிகம் கொடுத்தாலும் ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி டேட் கொடுத்து விட்டு இந்த பக்கம் யாராவது பெரிய ஹீரோக்கள் படம் வருகின்றது என்றால் அந்த டேட்டை இவர்களுக்கும் கொடுத்து விடுகிறார்.

இதனால் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க பல திரைப்படங்களுக்கு டப்பிங் பேசாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றார். இதனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்கள். இதை பார்த்த இவர் ஓவராக பண்ணுகிறார் என்று கூறி வருகிறார்கள்.