சிவகார்த்திகேயன் போலவே மாறிவரும் சூரி.. கருடன் படத்திற்காக எடுத்த ரிஸ்க்கு..ஓ இப்படி எல்லாம் நடந்திருக்கா..?

By Mahalakshmi on ஆனி 3, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் தற்போது தான் சற்று முன்னேற்றத்தை கண்டிருக்கின்றது. அரண்மனை 4 திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து சூரியின் நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

   

துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகின்றது. கோலிவுட்டில் பல இளம் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் சத்தமே இல்லாமல் வெளியான சூரியின் கருடன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

   

தொடர்ந்து அவரும் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சிறந்த காமெடியனாக வளம் வந்த சூரி தற்போது ஹீரோவாகவும் அசத்தி வருகிறார். விடுதலை படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த சூரிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

 

இந்த கருடன் திரைப்படத்தில் சூரியன் நடிப்பை பலரும் இன்றுவரை பாராட்டி வருகிறார்கள். முதல் நாளில் 4 கோடி வசூல், 2-வது நாளில் 6 கோடி வசூல், 3-வது நாளில் 6.5 கோடி என மொத்தம் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. என்னதான் படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் இதில் சூரிக்கு ஒரு சிக்கலும் இருக்கின்றது. இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு மதுரை அன்புச் செழியன் இடம் 20 கோடி வாங்கி இருந்தார்களாம்.

ஆனால் எல்லா செலவையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது 24.5 கோடி வந்துவிட்டதாம். 7 கோடி அளவுக்கு படம் கடனில் இருந்தது. இந்த 7 கோடியை கொடுத்தால் தான் படம் ரிலீஸ் செய்ய முடியும் என்ற பிரச்சனை இருந்த காரணத்தினால் சூரி 7 கோடிக்கு நான் பொறுப்பு என்று கையெழுத்திட்டு அந்த படத்தை ரிலீஸ் செய்திருக்கின்றார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் இப்படி தான் படங்களுக்கு படங்களில் கையெழுத்து போட்டு மிகப்பெரிய சிக்கலில் மாட்டி இருந்தார்.

இப்படி இருக்கும் போது சூரியின் அவரையே பின்பற்றுகிறார். கோலிவுட்டில் தற்போது முன்னணி ஹீரோவாக இருந்தாலும் சிவகார்த்திகேயன் ஏகப்பட்ட கடனில் சிக்கி இருக்கின்றார். அதேபோல சூரிக்கும் ஒரு நிலைமை வரக்கூடாது என்று பலரும் கூறி வருகிறார்கள். இருப்பினும் இந்த திரைப்படத்தை தயாரித்தவர் சூரியின் மேனேஜர் தான் அவருக்காக முன்வந்து இந்த உதவியை செய்திருக்கின்றார். ஆனால் இதனை அனைவரிடமும் பின்பற்றாமல் இருந்தால் சூரி தப்பித்து விடுவார் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.