தமிழ் சினிமா என்றாலே என்றும் அழியா புகழ் பெற்று ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படும் ஒருவர் தான் எம்ஜிஆர். ஒரு காலகட்டத்தில் சினிமா என்றாலே எம்ஜிஆர் என்ற அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அந்த அளவிற்கு ஈடுபாடுடன் எம்ஜிஆர் நடித்திருப்பார்.
பல கோடி ரசிகர்களைக் கொண்ட எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி தொடங்கினார் அதன் பின் புரட்சித் தலைவராக அறியப்பட்டார். அவர் நடிக்கும் படங்களில் அவரது கத்தி சண்டைக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கும். இப்படி கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட எம்ஜிஆர் ஒருவருக்கு ரசிகராக இருந்துள்ளார்.
அவர்தான் தென்னிந்தியாவின் இசைக் குயில் பி சுசீலா. மெல்லிசை அரசி, கான கோகிலா, கான சரஸ்வதி என அழைக்கப்படும் இவர் சுமார் 25,000 அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு தான் எம்ஜிஆர் தீவிர ரசிகராக இருந்துள்ளார்.
ஒருமுறை பி சுசீலாவை நேரில் சந்தித்த எம்ஜிஆர் தான் தங்களது மிகப்பெரிய ரசிகன் என கூறியுள்ளார். அப்போது சுசீலா உங்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும்போது நீங்கள் எனக்கு ரசிகரா என கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த எம் ஜி ஆர் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் பல கலைஞர்கள் உங்களுக்கு ரசிகர்கள் என கூறியுள்ளார். இது பி சுசிலா அவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை அளித்துள்ளது.