ஆரம்பத்தில் அதற்காக என்னை எல்லோரும் அவமானப்படுத்தினார்கள்.. பிறகு அதுவே தான் என்னை ஜெயிக்க வைத்தது – நடிகர் யோகிபாபு சொன்ன சீக்ரட்!

By Elango on மார்கழி 23, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்த பலரும் இப்போது ஹீரோவாக மாறிவிட்டதால் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. அதனால் இப்போதைக்கு நடிகர் யோகி பாபுவை வைத்துதான் காமெடி காட்சிகள் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் யோகி பாபுவுக்கு டஜன் கணக்கில் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்துக்கொண்டே இருக்கின்றன. அதனால் அவர் நிற்க கூட நேரமின்றி பிஸியாக பல படங்களில் ஓடி ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் யோகி பாபு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தினர். அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் நான் நடிக்க வந்த போது எல்லோரும் என்னுடைய முடியை வைத்து கிண்டல் செய்தார்கள். செல்லும் இடத்தில் எல்லாம் அவமானப்படுத்தினார்கள். ஆனால் காலப்போக்கில் அந்த முடிதான் என் அடையாளமாக மாறி பல பட வாய்ப்புகளை எனக்கு வாங்கி கொடுத்தது என்று நடிகர் யோகி பாபு அப்போது கூறியிருக்கிறார்.