கன்னட சினிமாவில் நடிகர்கள் சிவராஜ் குமார், உபேந்திரா இணைந்து நடித்த 45 – தி மூவி படம் வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவராஜ்குமாரிடம், நீங்கள் ஏன் இன்னும் அரசியலுக்கு வரவில்லை? என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த நடிகர் சிவராஜ் குமார் கூறியதாவது, மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை. நான் இப்போது உள்ள இந்த நிலையிலேயே நல்லது செய்துகொண்டு தான் இருக்கிறேன் என்று சிவராஜ்குமார் கூறியிருந்தார்.
சமீபத்தில் அரசியல் களத்தில் குதித்திருக்கும் நடிகர் விஜய், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன் என மேடைகளில் தொடர்ந்து பேசி வருகிறார். அதனால் அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை என்று சிவராஜ்குமார் கூறியிருப்பது விஜய்க்கு எதிரான கருத்து, அவர் ரஜினியின் நெருக்கமான நண்பர் என்பதால் விஜயை தாக்கிப் பேசிவிட்டார் என இணையத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
