பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான அமர் சிங் சாகல், பங்குச்சந்தை மோசடியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்த விரக்தியில் தனது கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடர்பு கொண்ட ஒரு மர்ம கும்பல், நிதி ஆலோசகர்கள் என நம்பவைத்து இவரை ‘F-777’ என்ற போலி குழுவில் சேர்த்துள்ளது.
ஐ.பி.ஓ பங்குகள் மூலம் பெரும் லாபம் தருவதாகக் ஆசை காட்டிய அந்த கும்பல், போலியான இணையதளக் கணக்குகளைக் காட்டி இவரிடமிருந்து சுமார் 8.10 கோடி ரூபாயைச் சுருட்டியுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முன்னாள் ஐ.ஜி, தற்கொலைக்கு முயலும் முன் எழுதிய கடிதத்தில், இந்த மோசடி குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என உருக்கமாகக் கோரியுள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், பாட்டியாலா போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இணையவழி முதலீடுகளில் பொதுமக்கள் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
