RCB க்கு இதுதான் கடைசி நம்பிக்கை… வைரலாகும் யோகி பாபு Bowling போடும் வீடியோ… கமெண்ட் பக்கத்தில் பாயும் ரசிகர்கள்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி தற்பொழுது கதாநாயகனாகவும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் பொம்மை நாயகி, மலை போன்ற திரைப்படங்கள் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

இதுமட்டுமின்றி ரஜினியுடன் ஜெயிலர், பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் ஜவான் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தும் வருகிறார். ஹீரோவாக மட்டுமின்றி அவ்வப்பொழுது காமெடி நடிகராகவும், முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்தும் வருகிறார்.

இப்படி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் யோகி பாபு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தனது சூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நடிகர் யோகி பாபுவின் திறமையை பாராட்டும் வகையில் தல தோனி கிரிக்கெட் பேட் ஒன்றையும் பரிசாக அளித்திருந்தார். இணையத்தில் அவ்வப்பொழுது நடிகர் யோகி பாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகும்.

அந்தவகையில் தற்பொழுது நடிகர் யோகி பாபு சூப்பராக bowling போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ RCB க்கு இதுதான் கடைசி நம்பிக்கை’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது , நடைபெற்று வரும் IPL போட்டிகளில் நன்றாக விளையாடி வரும் RCB அணியால் இதுவரை ஜெயிக்கவே முடியவில்லை. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அந்த அணியின் bowling சரியில்லாததே. எனவே, தற்பொழுது நடிகர் யோகி பாபுவின் இந்த வீடியோவை குறிப்பிட்டு இவ்வாறு கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by YOGI BABU (@yogibabu.official_)