சிவாஜிக்கு எளிதில் கிடைத்தது எம்ஜிஆருக்கு கிடைக்கல.. முதல் படத்திலே வருத்தத்தின் உச்சிக்கு சென்ற புரட்சித் தலைவர்..!

By Mahalakshmi

Published on:

60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவை தாங்கி பிடித்த நடிகர்கள் என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி. இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம் . அந்த அளவுக்கு தங்களுடைய முழு வாழ்க்கையும் சினிமாவிற்காக அர்ப்பணித்தவர்கள். கதாநாயகனாக எப்போது நடிப்போம் என்று அந்த இடத்திற்கு ஏங்கி ஒரு நடிகர் எம்ஜிஆர்.

   

சிவாஜியை பொருத்தவரையில் அந்த பிரச்சனை அவருக்கு ஏற்படவில்லை. அறிமுகமான திரைப்படத்திலேயே கதாநாயகனாக நடிக்க தொடங்கி விட்டார். சாயா என்ற திரைப்படத்தில் தான் முதன் முதலாக ஹீரோவாக நடிக்க அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடிக்க தொடங்கியது முதலே எப்போது நம்மை படத்தை விட்டு தூக்குவார்கள் என்ற பயத்துடன் தான் இருந்து வந்தார்.

ஏனென்றால் அந்த படத்தில் பி யு சின்னப்பாவை நடிக்க வைக்க பலரும் கூறிவந்த நிலையில் நம்மை தூக்கிவிட்டு அவரை நடிக்க வைத்து விடுவார்களோ என்ற பயத்துடன் இருந்தார் எம்ஜிஆர். ஆனால் பி யு சின்னப்பா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் வேண்டாம் என்று மறுத்து விட்டார். ஒரு காலகட்டத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு நின்று போய் விட்டது.

அப்படிப்பட்ட நிலையில் இருந்த எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக இருந்தது ஏ எஸ் எஸ் சாமி. இவர் இயக்கிய ராஜகுமாரி திரைப்படத்திற்கு எம்கே தியாகராஜ பாகவதரையும் பானுமதியையும் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்த நிலையில் என்னுடைய திரைப்படத்திற்கு அவர்கள் யாரும் வேண்டாம் எம் ஜி ராமச்சந்திரன் தான் வேண்டும் என்று விடாப்படியாக இருந்து அவரை வைத்து படத்தை இயக்கினார் ஏ எஸ் எஸ் சாமி. அந்த படத்திற்கு பிறகு எம் ஜி ராமச்சந்திரன் கதை சரித்திரம் தான்.

author avatar
Mahalakshmi