மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து உள்ளீர்களா?…

By Samrin

Published on:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் விவேக். இவர் தனது நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

   

இவர் தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றி  கொண்டிருந்த நேரத்தில் Madras humour club -ல் அவர் செய்த காமெடி நிகழ்ச்சியில் மூலம்  பாராட்டுகளை பெற்றார்.

அதன் பின் இவர் இவர் கே பாலச்சந்திரனின் இயக்கத்தில்  ‘மன உறுதி வேண்டும்’ என்ற படத்தின்  மூலமாக தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து இவர் காதல், மன்னன், குஷி,தூள், ரன் என பல வெற்றி படங்களில்  தனது நகைச்சுவையால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவர் பெரும்பாலான திரைப்படங்களில் கதாநாயகனின் நண்பன் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

எல்லா கதாபாத்திரங்களிலும் மிகவும் சிறப்பாக நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

2009 ஆம் ஆண்டு விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது .சிறந்த காமெடியன் என்ற தமிழக அரசின் விருது ஐந்து முறை பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து இவர் மூன்று பிலிம் பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் ஏ பி ஜே அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்டவர்.

இவர் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவர் சிரிப்பும் சிந்தனையும் கலந்த நகைச்சுவையை திரையில் பரப்பினார்.

இதனால் இவரை சின்னக்  கலைவாணர் என்று ரசிகர்கள் கொண்டாடினர் . இதைத் தொடர்ந்து இவர் அன்னியன், சிவாஜி ,என சினிமாவில் மிகப் பிரம்மாண்டமான படைப்புகளிலும் காமெடியனாக நடித்து திரையுலகில் தனது தனக்கான ஒரு முத்திரையை பதித்தார்.

நடிகர் விவேக் அருண் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு , தேஜசுவின் , பிரசன்னா குமார் என்ற  பிள்ளைகள் உள்ளனர்

இவர் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.