ஆஸ்கார் நாளில் விவேக் மற்றும் தமிழ் குறித்து ட்வீட் செய்த ஏ ஆர் ரஹ்மான்… ஆனால் நீங்க சொல்றதும்  உண்மைதான்…

By Begam

Published on:

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இவர்  இசையமைத்த ‘ஸ்லிம் டாக் மில்லியனர்’ என்ற இந்தி திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று  இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தினார்.

   

1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசைத்துறையில் அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான். தன்னுடைய முதல் படத்திலியே  தன்னுடைய முத்திரையை பதித்தார். இதைத் தொடர்ந்து இவர் இசையமைத்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விவேக். இவரின் மரணம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு திரை பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் இரங்கல் பதிவுகளை வெளியிட்டனர். அந்த வகையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானும் தனது இரங்கலை தெரிவித்திருந்ததும்  குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ஏ ஆர்  ரஹ்மான் அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது ஒரு கருத்துக்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்ட நேற்றைய தினத்தில் இவர் விவேக் மற்றும் விஜயகாந்த் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசி ஒரு படத்தின் காட்சியை பகிர்ந்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் இவர் ‘காமெடி லெஜெண்ட் விவேக்கை மிஸ் செய்கிறேன். திரை உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு’ என்றும் பதிவு செய்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர்  ரஹ்மான் தமிழ் மீது மிகவும் பற்று கொண்டவர். நடிகர் விவேக்கும் அப்படித்தான். தற்போது இவர் இந்த ட்வீட்  ஆனது இணையத்தில் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.