தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் வரலாறு காணாத மழை பொழிந்துள்ளது. இதனால் மழைநீர் அனைத்து இடங்களிலும் பல அடி உயரத்திற்கு தேங்கி நிற்கிறது. அது மட்டுமல்லாமல் பல இடங்களில் வீடுகளுக்குள் உள்ளூர் வெள்ள நீர் புகுந்து விட்டதால் மக்கள் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், மழை நீர் வடிகால் என ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிச்சு முடிச்சீங்களே, அது சென்னைக்கு தானா இல்லை சிங்கப்பூருக்கு செஞ்சீங்களா என கேட்டுள்ளார். நான் அண்ணா நகரில் தங்கி இருக்கிறேன் இங்கேயே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மற்ற இடங்களில் நிலைமை எப்படி இருக்கும். கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது மக்கள் எல்லோருக்கும் உதவினோம்.
ஆனால் தற்போது எட்டு வருடங்கள் கழித்து அதை விட மிகவும் மோசமான நிலை தான் வந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் விஷால் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…