தம்மாத்தூண்டு இருந்துட்டு பாடுற பாட்ட பார்த்தியா.. தளபதி விஜயின் குட்டி ரசிகை பாடிய பாடல்.. இணையத்தை கலக்கும் வீடியோ..!

By Mahalakshmi on ஆனி 19, 2024

Spread the love

நடிகர் விஜயின் குட்டி ரசிகையான ஒரு பாப்பா சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடலை தனது மழலை குரலில் பாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஃபேவரிட் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தனது திரைப்படத்தின் மூலமாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் மாஸ் ஹீரோவாக வலம் வருகின்றார், இவரது திரைப்படங்கள் என்றாலே அது பாக்ஸ் ஆபிஸில் வசூல் பேட்டை நடத்தும். இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நீ நான் என போட்டி போட்டுக் கண்டு இவரை வைத்து படம் எடுக்க முயற்சி செய்வார்கள்.

   

   

எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய திறமை மூலமாக தற்போது சாதித்து காட்டி இருக்கின்றார். ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்த விஜய் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகின்றார்.

 

இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். அதற்கு முன்னதாக கடைசியாக ஒரே ஒரு திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

ஆனால் அது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை . ஏனென்றால் தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்குவதற்காக ஏற்பாடுகளை தயார் செய்து கொண்டிருக்கின்றார் நடிகர் விஜய். வருகிற 22ஆம் தேதி அவர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ள நிலையில் அதனை அடுத்து இரண்டு கட்டமாக மாணவ மாணவியர்களுக்கு ஊக்க தொகையும் சான்றுகளும் வழங்க இருக்கின்றார்.

இந்த வேலை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கு அவர் தயார் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நடிகை விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சிறு குழந்தைகள் கூட அவரின் பாடலுக்கு பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகும்.

ஆனால் தற்போது சரியாக பேசக்கூட தெரியாத ஒரு மழலை குழந்தை தனது அழகான குரலில் ‘சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்’ என்ற விஜயின் பாடலை அவ்வளவு அழகாக பாடியிருந்தார். இதை கேட்டு ரசிகர்கள் பலரும் பாதி பாட்டையே பாடி முடிச்சிட்டியே பாப்பா என்று கூறி வருகிறார்கள்.