லாரன்ஸ் உடன் இணைந்து மாற்றத்தை உருவாக்க தயாரான எஸ்ஜே சூர்யா.. வைரலான வீடியோ..!

By Mahalakshmi on ஜூன் 19, 2024

Spread the love

நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எஸ்ஜே சூர்யா மாற்றத்தை உருவாக்க தயாராகிவிட்டதாக வெளியிட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் உழைப்பாளி என்ற திரைப்படத்தின் மூலமாக டான்ஸ் அசிஸ்டன்டாக அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும், மாஸ்டர் ஆகவும், இயக்குனராகவும் கலக்கி வருகின்றார். இதையெல்லாம் தாண்டி அவர் மிகச்சிறந்த சமூக ஆர்வலர் என்று கூறினால் அது சிறப்பாக இருக்கும்.

   

   

இவர் நடிக்க தொடங்கிய முதல் திரைப்படத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பலவிதமான வகையில் உதவி செய்து வருகின்றார். அதனை உதவியோடு நிறுத்தி விடாமல் அவர்களுக்காக குரல் கொடுத்து தனக்கு கிடைக்கும் பணத்தில் மிகப்பெரிய அளவில் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றார். தன்னை போல் சமூக பணியில் ஈடுபடும் பலருக்கும் முன்மாதிரியாக இருந்து வருகின்றார்.

 

பல அறக்கட்டளைகளை நிறுவி அதில் உதவி செய்து வரும் ராகவா லாரன்ஸ் கடந்த மே ஒன்றாம் தேதி முதல் மாற்றம் என்கின்ற தலைப்பில் புதிய முயற்சி ஒன்றை தொடங்கி இருக்கின்றார். தன்னால் விதைக்கப்பட்டு இன்று மரமாக வளர்ந்து நிற்கும் மாணவ மாணவிகள் இனி அவர்கள் ஈட்டும் பணத்திலிருந்து தங்களால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறி இருக்கின்றார். அது குறித்த அறிவிப்பை ஏப்ரல் 26 ஆம் தேதி தனது எக்ஸ் தள  பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு சினிமா பிரபலங்களும் அவருக்கு உதவ முன் வந்திருக்கிறார்கள். கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷா, எஸ் ஜே சூர்யா என பல பிரபலங்கள் இந்த மாற்றம் அறக்கட்டளையில் இணைந்து தங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். மே ஒன்றாம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ் ஜே சூர்யா கலந்து கொண்டு பேசியிருந்தார். இதை தொடர்ந்து நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் தேனம்பாக்கத்தில் கிராமத்தில் விவசாயிக்கு டிராக்டர் வழங்கப்பட்டது இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கின்றது. அதாவது ஏற்கனவே சொன்னபடி ராகவா லாரன்ஸ் மாஸ்டர் பத்து டிராக்டர்களை 10 ஊர்களுக்கு வழங்கி விட்டார் .பதினோராவதாக ஒரு டிராக்டர் வந்து இருப்பதாக அவர் உதவியாளர் போல வெளியில் சென்று பார்த்தபோது எஸ்டி சூர்யா தானும் தனது பணத்தில் இந்த டிராக்டரை வாங்கிக் கொடுத்ததாக கூறியிருந்தார்.

அதனை நீங்களே கொடுத்து விடுங்கள் என்று கூற, இல்லை இதில் நீங்கள் செய்த உதவி நீங்கள் உங்கள் கையால் கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று காஞ்சிபுரம் அழைத்துச் சென்று அந்த டிராக்டரை அவர் கையாலயே கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Ragava Lawrence (@actorlawrence)