WOW இது நல்லா இருக்கே.! அமெரிக்க வரிவிதிப்பால் இந்திய தொழில்துறை பாதிக்காமல் இருக்க… விஜய் சொன்ன 11 ஐடியா..!

Spread the love

சமீபத்தில் அமெரிக்கா இந்தியாவின் நிதிவரியை உயர்த்தியது. இந்திய பொருளாதாரத்தை காப்பாத்த  தவெக தலைவர்  நடிகர் விஜய் 11 யோசனைகளை வைத்துள்ளாராம். இந்த விதி அமலுக்கு வந்ததிலிருந்து இந்திய பொருட்களை வாங்குவதை அமெரிக்கா தவிர்த்து வருகிறது. இதில் மிகப்பெரிய நஷ்டம் என்பது தமிழ்நாட்டுக்கு தான். இதுவரை மத்திய அரசும் தமிழகத்தை ஆளும் திமுக அரசும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக  வெற்றி கழகம் அரசுக்கு 11 யோசனையை சொல்ல விரும்புகிறது.

1. தமிழ்நாட்டில் தொழிலில் ஏற்பட்ட மாற்றத்திற்காக தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளை தமிழ்நாட்டில் இருந்து உள்ளடக்கி மத்திய -மாநில அளவிலான கூட்டு அணி குழுவை உருவாக்க வேண்டும்.

2. நடுத்தர ஏற்றுமதியாளர்களை ஆதரித்து மத்திய அரசு ஒரு சிறப்பு ஏற்றுமதி நிலையான நிதியை உருவாக்க வேண்டும்.

3. வருமான சூழலை புரிந்து கொண்டு மானியக் கடன் வழங்குவது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

4.கடன் வழங்குவதற்கு எளிதான முறையை பயன்படுத்தி, எளிய வங்கிக் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும்.

5. MSME நிறுவனங்கள் பெற்ற கடனில்  ஐந்து சதவீதம் தள்ளுபடி வழங்க வேண்டும். பின்பு பிரத்யேக வட்டி மானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

6.ஏற்றுமதியாளர்களுக்கு நிலுவையில் உள்ள கடனில் 30% வரை பிணையம் இல்லாத கடன்களை அமைக்க அவசர கடன் கொடுக்கும் வகையில் திட்டம் வர வேண்டும்.

7. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வாங்கிய கடன் மேலும் இரண்டு ஆண்டுகள் அதிக விலக்கு அளிக்க வேண்டும்.

8. பருத்தி மற்றும் பிற மூலப் பொருள்களின் இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்.

9.அமெரிக்காவை தவிர பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

10. ஏற்றுமதியை நம்பி இருக்கும் துறைகளுக்கு தற்காலிக நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

11. MSME நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சிறப்பு நிதி தொகுப்பினை ஏற்படுத்த வேண்டும்.

பொருளாதரத்தை பாதுகாக்க இதுப்போன்ற நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம், என்று நடிகர் விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.

Divyamayakannan

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

10 minutes ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

18 minutes ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

23 minutes ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

25 minutes ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

38 minutes ago