சமீபத்தில் அமெரிக்கா இந்தியாவின் நிதிவரியை உயர்த்தியது. இந்திய பொருளாதாரத்தை காப்பாத்த தவெக தலைவர் நடிகர் விஜய் 11 யோசனைகளை வைத்துள்ளாராம். இந்த விதி அமலுக்கு வந்ததிலிருந்து இந்திய பொருட்களை வாங்குவதை அமெரிக்கா தவிர்த்து வருகிறது. இதில் மிகப்பெரிய நஷ்டம் என்பது தமிழ்நாட்டுக்கு தான். இதுவரை மத்திய அரசும் தமிழகத்தை ஆளும் திமுக அரசும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக வெற்றி கழகம் அரசுக்கு 11 யோசனையை சொல்ல விரும்புகிறது.
1. தமிழ்நாட்டில் தொழிலில் ஏற்பட்ட மாற்றத்திற்காக தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளை தமிழ்நாட்டில் இருந்து உள்ளடக்கி மத்திய -மாநில அளவிலான கூட்டு அணி குழுவை உருவாக்க வேண்டும்.
2. நடுத்தர ஏற்றுமதியாளர்களை ஆதரித்து மத்திய அரசு ஒரு சிறப்பு ஏற்றுமதி நிலையான நிதியை உருவாக்க வேண்டும்.
3. வருமான சூழலை புரிந்து கொண்டு மானியக் கடன் வழங்குவது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
4.கடன் வழங்குவதற்கு எளிதான முறையை பயன்படுத்தி, எளிய வங்கிக் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும்.
5. MSME நிறுவனங்கள் பெற்ற கடனில் ஐந்து சதவீதம் தள்ளுபடி வழங்க வேண்டும். பின்பு பிரத்யேக வட்டி மானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
6.ஏற்றுமதியாளர்களுக்கு நிலுவையில் உள்ள கடனில் 30% வரை பிணையம் இல்லாத கடன்களை அமைக்க அவசர கடன் கொடுக்கும் வகையில் திட்டம் வர வேண்டும்.
7. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வாங்கிய கடன் மேலும் இரண்டு ஆண்டுகள் அதிக விலக்கு அளிக்க வேண்டும்.
8. பருத்தி மற்றும் பிற மூலப் பொருள்களின் இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்.
9.அமெரிக்காவை தவிர பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
10. ஏற்றுமதியை நம்பி இருக்கும் துறைகளுக்கு தற்காலிக நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
11. MSME நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சிறப்பு நிதி தொகுப்பினை ஏற்படுத்த வேண்டும்.
பொருளாதரத்தை பாதுகாக்க இதுப்போன்ற நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம், என்று நடிகர் விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.
