அதிகாலையிலையே நடந்த கோர விபத்து… ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் துடிதுடித்து பலி… சோக சம்பவம்…!

Spread the love

திருச்சி நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்.

தென்காசியை சேர்ந்தவர் ஜோசப், சென்னையில் வாடகை கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருடன், இவரது நண்பர் செல்வகுமார், அவரது மனைவி யசோதா, இவர்களது ஒன்றரை வயது குழந்தை அனோனியா மற்றும் வேறொரு நண்பர் விஜயபாபு உள்ளிட்ட 5 பேரும் சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மீண்டும் சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது, இவர்கள் பயணித்த கார் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்து வந்த அனோனியா, யசோதா, விஜயபாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் ஜோசப், செல்வகுமார் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.

Srimathi

Recent Posts

“தனி ரூட்டில் சி.வி.சண்முகம்! பதவியேற்காமல் வெளியேறியது ஏன்?”… தமிழக அரசியலை புரட்டிப்போடும் 34 எம்.எல்.ஏ-க்களின் மூவ்….!

தமிழகத்தின் 2026 சட்டசபை தேர்தல் முடிந்து, தமிழக வெற்றிக் கழக அரசு நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், இன்று புதிய எம்.எல்.ஏ-க்களின்…

5 minutes ago

“நடுக்கடலில் எமபாசம்!”… ஹோண்டியஸ் கப்பலில் 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ்.. 3 பேர் பலி.. பீதியில் உலக நாடுகள்..!!

நெதர்லாந்து நாட்டின் 'எம்பி ஹோண்டியஸ்' (MB Hondius) என்ற சொகுசு கப்பலில் பயணித்த இரண்டு இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் (Hantavirus)…

11 minutes ago

BREAKING: “முதல்வர் விஜய் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு?”… தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்.. கோட்டையை அதிரவைக்கும் முக்கியத் தகவல்…!

தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த…

13 minutes ago

“ஒரே நாளில் சாம்பலான 5 லட்சம் கோடி”…. இந்தியப் பொருளாதாரத்திற்கு வந்த சோதனை … பங்குச்சந்தையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அன்று ரத்தச் சிவப்பில் வர்த்தகமாகி முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச…

20 minutes ago

“சிங்கப்பெண்” படை தயார்!… முதல்வர் விஜய் போட்ட முதல் கையெழுத்து.. தெறிக்கவிடும் அதிரடி அரசாணை… கொண்டாட்டத்தில் பெண்கள்…!!!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் புதிய…

22 minutes ago

“பெரம்பூரைத் தேர்வு செய்த விஜய்”… திருச்சியை கைவிட்டது ஏன்?… பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்…!

தமிழக சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப்…

27 minutes ago