தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தற்போது வரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.1961 ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 1970-களில் ஹீரோ சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அழகும், திறமையும் இருந்தும் பெரும்பாலான படங்களில் இரண்டாவது நாயகனாக நடிக்கும் வாய்ப்பே இவருக்கு கிடைத்தது.
பின்னர் அதுவும் குறைந்த போக, காலத்திற்கு ஏற்றாப்போல் தன்னை குணச்சித்திர வேடங்களுக்குள் புதைத்து கொண்டார். ரஜினிகாந்த், விஜயகாந்த், அர்ஜுன், விஜய், அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சுமார், 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகுமார், 3 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ தொடரில் நடித்து வருகிறார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்த இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரு மனைவிகள்.
1969 ஆம் ஆண்டு முத்து கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜயகுமாருக்கு அருண் விஜய்யோடு சேர்த்து மொத்தம் மூன்று பிள்ளைகள். அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மஞ்சுளாவை காதலித்த பெற்றோர் சம்பந்தத்துடன் 1975 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார் மஞ்சுளா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள சூழ்நிலையில் 2013 ஆம் ஆண்டு காதல் மனைவி மஞ்சுளா மரணம் அடைந்த நிலையில் தற்போது தனது முதல் மனைவியுடன் 82 வயதில் ஆறு பிள்ளைகளுடன் விஜயகுமார் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
மகள்கள் கவிதா, அனிதா, மகன் அருண் விஜய் ஆகியோர் முதல் மனைவி பிள்ளைகள். அடுத்து மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள். இவர்களில் நான்கு பேர் சினிமாவில் இருக்கின்றனர். இருவர் மட்டும் சினிமா பக்கம் வரவில்லை. இவரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…