தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜயகுமார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொலைக்காட்சி தொடர்களில் தற்பொழுதும் நடித்து கொண்டுள்ளார். விஜயக்குமாரை தொடர்ந்து அவரது மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் இப்பொழுது ஆக்சன் ஹீரோவாக வெற்றி வலம் வந்து கொண்டுள்ளார்.
நடிகர் விஜய்குமாரின் மனைவி மஞ்சுளா, மகன் அருண் விஜய், மகள்கள் வனிதா விஜயகுமார், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார், கவிதா விஜயகுமார் என பெரும்பாலானோர் திரையுலகில் தடம் பதித்திருக்கின்றனர். விஜயகுமாரின் பேரனும் அருண் விஜய்யின் மகனுமான ஆர்ணவ்வும் ஓ மை டாக் படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார்.
இந்நிலையில், மூத்த மகளான அனிதாவின் மகள் தியாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வெளிநாட்டில் மருத்துவம் படித்து வரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு, திலன் என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த திருமண விழாவில் நடிகை வனிதாவை தவிர குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திருமண புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து திருமணத்தில் நடைபெற்ற ஒரு சில மறக்க முடியாத நினைவுகளையும் அவ்வப்பொழுது இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் தியாவின் தாத்தாவான நடிகர் விஜயகுமார் தனது பேத்தியின் திருமணத்தில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…