கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும்.. மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா.. நடிகர் விஜய் சார்பாக வெளியான அறிக்கை ..!

By Mahalakshmi on ஜூன் 10, 2024

Spread the love

நடிகர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்கும் நிகழ்வு தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய். தற்போது கோட் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கின்றார் .

   

   

இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு விஜய் தொடங்கி இருக்கும் கட்சி வேலையில் மும்பரமாக ஈடுபட இருக்கின்றார். தமிழக வெற்றிக்கழகம் என பெயர் வைத்திருக்கும் இந்த கட்சி வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. இவரின் அரசியல் நகர்வு அனைவரையும் கவனத்தில் ஈர்த்துள்ளது.

 

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்துடன் விஜய் இந்த அரசியலில் களமிறங்குகின்றார். கடந்த வருடம் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை சந்தித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி இருந்த 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களையும் சந்தித்து பரிசு வழங்கியிருந்தது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் சந்திப்பு தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் அதிகாரப்பூர்வமாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்ட இருக்கின்றார். முதற்கட்டமாக வரும் 28ஆம் தேதி சென்னை திருவான்மையூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெறுகின்றது.

இரண்டாவது கட்டமாக ஜூலை மூன்றாம் தேதி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகள் வழங்க இருக்கின்றன. பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றுகளும் ஊக்க தொகையும் விஜய் வழங்கி கௌரவ இருக்கின்றார் என தமிழக வெற்றிக்கழகம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த மாணவ, மாணவிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் அரசியலுக்கு தேவையான அனைத்து விஷயத்தையும் நடிகர் விஜய் செய்து வருகின்றார் என்று கூறி வருகிறார்கள்.