நடிகை நவ்யா நாயர் தனது மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நவ்யா நாயருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் நவ்யா நாயர். இவர் தமிழில் 2004 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் உருவான அழகிய தீயே என்ற திரைப்படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
இதனால் அடுத்தடுத்து தமிழில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாயக்கண்ணாடி சில நேரங்களில், ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அந்த வருடத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இதற்கிடையில் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தபோது பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நவ்யா நாயர் தான் கொடுத்ததாக அந்த நபர் கூறியதால் இருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பல வதந்திகள் வெளிவந்தது. இதனால் நவ்யா நாயர் கணவரை விவாகரத்து செய்யப் போவதாகவும் வதந்திகள் பரவி வந்தது.
ஆனால் நடிகை நவ்யா நாயர் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை நவ்யா நாயர் மலையாளத்தில் ஜானகி ஜானே என்ற திரைப்படத்தின் மூலமாக ரிஎன்றி கொடுத்தார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நடிகை நவ்யா நாயர் தனது மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நவ்யா நாயருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.