விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படம் மகாராஜா. நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியான திரைப்படம் மகாராஜா. இந்த திரைப்படத்தை குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கியிருந்த நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகந்தாஸ், திவ்யபாரதி, சிங்கம் புலி, நட்டி நடராஜன், அபிராமி உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.
கடந்த ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் 25 நாட்களைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
இந்த படத்தின் மூலமாக 100 கோடி வசூல் செய்த நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வசூலில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. பாலியல் வன்கொடுமையை சிறப்பாக சித்தரித்ததற்காக இயக்குனருக்கு பல பாராட்டுகளும் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் மகாராஜா திரைப்படம் ஓடிடி-யில் ரிலீஸ்-ஆக உள்ளது. இந்த திரைப்படத்தின் உரிமத்தை netflix நிறுவனம் வாங்கியிருக்கின்றது. மேலும் வருகிற ஜூலை 12ஆம் தேதி இந்த திரைப்படம் netflix வெளியாக உள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக இந்த நிறுவனம் அறிவித்திருக்கின்றது.