தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன் மெட்ராஸ் உள்ளிட்ட படங்கள் கார்த்தியை பிரபலமாக்கியது. முன்னதாக கார்த்தி உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார்.
கார்த்தி தென்னிந்திய பிலிம் பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, பிரியாணி, கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் கார்த்தி நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார் கார்த்தி. கடைசியாக கார்த்தி நடிப்பில் ரிலீஸ் ஆன ஜப்பான் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இப்போது அடுத்தடுத்த படங்களில் கார்த்தி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கார்த்தியின் ரசிகர் மன்ற தலைவராக இருப்பவர் பரமு. பரமுவின் தந்தை இன்று உயிரிழந்தார்.
இதனை அறிந்த கார்த்தி பரமுவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தந்தைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் பரமு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோசும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
All India @Karthi_Offl Fans Club Head #Paramu Avgl’s Father Passed Away. Today #Karthi Reached Paramu’s Adyar House & Paid His last Respect. pic.twitter.com/x6bpzdygdi
— The Karthi Team (@TheKarthiTeam) July 8, 2024