அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2000- ஆம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் மம்முட்டி, அஜித்குமார், ஐஸ்வர்யா ராய், ஸ்ரீவித்யா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்தார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பிறகு கலைப்புலி தாணுவுக்கும் அஜித்துக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. பொதுவாக அஜித் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அஜித் பற்றி ஒரு தகவலை கூறியுள்ளார். கலைப்புலி தாணுவின் மனைவி சிங்கப்பூரில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வர தாமதமானது.

இதனை அறிந்த அஜித்தும் ஷாலினியும் வீட்டு வாசலில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தார்களாம். ஒரு மிகப்பெரிய நடிகர் தயாரிப்பாளரின் வீட்டு வாசலில் மனைவியுடன் நான்கு மணி நேரம் காத்திருப்பது எளிமையான விஷயம் அல்ல. சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித் மனிதாபிமானம் மிக்கவர் என கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

