தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் இறுதி கட்டப்படிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றார். அதை தொடர்ந்து பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மைக் மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

போஸ்ட் ப்ரடக்ஷன் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இதைத்தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கின்றார். அடுத்ததாக ஹெச்.வினோத் தான் தளபதி 69 வது திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று கூறிவரும் நிலையில் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் கட்சி ஒன்றை தொடங்கியிருக்கின்றார். அடுத்த வருடம் நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். அதற்கு முன்பதாக அனைத்து படங்களிலும் முடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் ஈடுபட முடிவெடுத்து இருக்கின்றார். அவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து சோசியல் மீடியாவில் அவர் தொடர்பான செய்திகள் வைரலாகி வருகின்றது.

மேலும் குடும்பத்தில் நடிகர் விஜய் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகருடன் மன வருத்தத்தில் இருப்பதாகவும் அவருடன் பேசாமல் இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர். இதைப்பற்றி எவ்வளவு சர்ச்சை வந்தாலும் விஜய் மௌனம் சாதித்து வந்தார். மேலும் எஸ்.ஏ சந்திரசேகர் மட்டும் அவ்வப்போது மீடியாவில் பேசி வந்த இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் முக்கியமானது விஜய்யின் அரசியல் வருகைதான்.
இதில் ஆரம்பித்த அப்பா, மகன் பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விஜய் தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இருவரின் தோல் மீதும் கை போட்டபடி நடிகர் விஜய் போஸ் கொடுத்திருக்கின்றார்.

சமீபத்தில் எஸ்ஏ சந்திரசேகர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற போது கூட நடிகர் விஜய் அவரை வந்து நேரில் பார்க்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார். மேலும் இப்படியே அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டாலும் மற்றொரு வதந்தியும் சரியாக போகும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
