சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் ஸ்ரீதேவி அசோக். இரண்டாவது முறையாக பெண் குழந்தையை கடந்த வியாழக்கிழமை அன்று பெற்றெடுத்தார். இந்நிலையில் அவர் தான் பிரசவத்திற்கு சென்றது முதல் டெலிவரி ஆனது வரை நடந்த விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.
கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்கின்ற படத்தில் தனுஷ் அவர்களுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்ரீதேவி. பின்னர் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதனால் சின்னத்திரை பக்கம் வந்த ஸ்ரீதேவி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு என்கின்ற சீரியல் மூலமாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து தமிழில் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார். அதிலும் இவருக்கு வில்லி கதாபாத்திரம் நல்ல பொருத்தமாக இருக்கும்.
சுமார் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கும் ஸ்ரீதேவி தற்போது பொன்னி, மோதலும் காதலும் போன்ற சீரியல்களில் நடித்து வருகின்றார். சின்னத்துறையில் சிறந்த நடிகையாக கலக்கி வரும் ஸ்ரீதேவி அசோக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவி தொடர்ந்து சீரியலிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதனை அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் மருத்துவமனைக்கு சென்றது முதல் அங்கு என்னென்ன நடந்தது டெலிவரிக்காக கஷ்டப்பட்டது.
View this post on Instagram
பின்னர் சிசேரியன் செய்தது குழந்தையை கையில் கொடுத்தது என்று பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சொந்தமாக youtube சேனல் வைத்திருக்கும் நடிகை ஸ்ரீதேவி அதில் விரிவாக தனது டெலிவரி பயணத்தை பகிர்ந்து இருக்கின்றார்.