தமிழ் சினிமாதுறையில் முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வந்தவர்களில் பலரும் அரசியல் துறையிலும் ஈடுபட்டு உள்ளார்கள். இதில் எம்ஜிஆர் ஜெயலலிதா விஜயகாந்த் கமலஹாசன் குஸ்பு வரிசையில் நடிகர் விஜய்யும் அரசியலில் களம் இறங்கினார் என தகவல் வெளியாகின.

இந்த நிலையில், விஜய் நடிப்பில் வெளியான “லியோ” திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் விழாவின் போது அவர் கூறிய “2024 ம் ஆண்டு கப் முக்கியம் பிகிலே” என்ற வார்த்தை மூலம் ரசிகர்கள் மத்தியில் கட்சியில் வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தை நீக்கியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் மக்களுக்கு பல நல்ல விஷயங்களை அரசியலில் ஈடுபடுவது சம்பந்தமாக செய்து வந்துள்ளார்.

தற்போது நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி தனது கட்சி வேலையை ஆரம்பித்துள்ளார் என பல நெட்டிசன்களும் தெரிவித்து வருகின்றனர். மேலும், விஜய் ரசிகர் மன்ற இயக்கத்தின் தலைவர் ஆனந்த் தலைமையில் அனைத்து நிர்வாகிகளை ஒன்று திரட்டி கட்சி சம்பந்தமான பொறுப்புகள் கொடுப்பதற்கான ஆலோசனை நடத்தி விருந்தும் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் கட்சி ஆரம்பிப்பதற்கான கொடியை உருவாக்கி அதில் உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது விஜய் ரசிகர் மத்தியில் தீயாக பரவி வருகிறது. மேலும் , நடிகர் விஜய் ஆரம்பிக்கும் கட்சி பெயரை பிப் 4 தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்ற தகவல் கசிந்துள்ளது.
உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும் ????…. pic.twitter.com/i64r8XB5vj
— S A Chandrasekhar (@iamDirSAC) January 28, 2024
