தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவரை அவரது ரசிகர்கள் தளபதி என்று கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் தாறுமாறான வெற்றியை பெற்றது.

#image_title
இதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்து விட்டு தளபதி 69 திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவிற்கு குட் பை சொல்லி விட்டு அரசியலில் களமிறங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான முதற்படியாக தளபதி விஜய் ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என்ற பெயரில் கட்சி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
நடிகர் விஜய் எப்பொழுதும் ஒரே மாதிரியான கதையுள்ள திரைப்படங்களில் நடிப்பது கிடையாது. காமெடி, ஆக்சன், ரொமான்ஸ் என அத்தனை கதாபாத்திரங்களிலும் புகுந்து விளையாடுவார். தற்பொழுது நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தால், அவர் இனி நடிக்க மாட்டேன் என எடுத்த முடிவால் அவரது ரசிகர்கள் மிகவும் கவலையடைந்து உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் பேட்டியளித்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் தற்பொழுது திடீரென வெளியாகி வைரலாகி வருகிறது.

#image_title
அந்த வீடியோவில் அவர், “இமேஜ் அப்புடின்னு வந்துட்டா என்ன problem – னா ஏறக்குறைய ஒரே மாதிரியான கதைகளை தான் பண்ண முடியும். கொஞ்சம் கூட வித்தியாசமா பண்ண முடியாது. இமேஜ் -னு ஒன்னு இல்லைனா அவுங்க அதை பத்தி கவலைப்படாம எந்த மாதிரி கதைகளை வேணும்னாலும் choose பண்ணி பண்ணலாம். difference கிடைக்கும்.எனக்கு அந்த மாதிரி பயமெல்லாம் கிடையாது. இமேஜ் வட்டத்துக்குள்ள வரணும்னு நான் ஆசைப்படல. வரவும் மாட்டேன்.” என கூறியிருந்தார். தற்பொழுது இந்த வீடியோவை திடீரென தளபதி ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram