அடேங்கப்பா, ஒரே நாளில் இவ்ளோ views-ஆ.. இமாலய சாதனை படைத்த தளபதியின் Whistle Podu பாட்டு..

By Begam

Updated on:

தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர்  தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

   

இத்திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார். இவர் நடிப்பை விட்டு விலகுவது அவரது ரசிகர்களுக்கு கஷ்டத்தை கொடுத்தாலும், இனி அரசியலில் ஈடுபட போவதை நினைத்து உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் GOAT படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘விசில் போடு’ வெளியானது. விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது பற்றியும் அந்த பாடலில் வரிகள் இடம்பெற்று இருந்தது. தற்பொழுது இந்த பாடல் இணையத்தை அதிர வைக்கும்  வகையில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

அதாவது 24 மணி நேர வியூஸ் கணக்கில் இதுவரை பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் தான் 23.7 மில்லியன் பார்வைகளை கடந்து முதலிடத்தில் இருந்தது. ஆனால் அந்த சாதனையை வெறும் 22 மணி நேரம் 45 நிமிடங்களில் ‘விசில் போடு’ பாடல் முந்தி உள்ளது. தற்பொழுது வரை ரிலீசாகி 1 1|2 நாளில் இந்த பாடல் 30 மில்லியன் வியூஸ்களை கடந்து இமாலய சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தளபதி ரசிகர்கள் தற்பொழுது வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

c60dda8e 0c76 4bfa 8881 516b49897db6