தலைவர் 171 படத்தின் ஹீரோயின் இவங்க தானா..? அட இவுங்க, லோகேஷை மாட்டிவிட்டு ஆளாச்சே..

By Arun on சித்திரை 16, 2024

Spread the love

ரஜினிகாந்த் தற்போது தா.செ.ஞானவேல் இயக்கத்தில் “வேட்டையன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், துசாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 171 ஆவது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணையவுள்ளார். இத்திரைப்படம் “The Purge” என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது.

   

   

ஒரே நாளில் நடப்பது போன்ற கதையம்சத்தை கொண்ட திரைப்படமாக இது இருக்கும் என்று தகவல்கள் வெளிவருகின்றன. சமீபத்தில் “தலைவர் 171” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 22 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

 

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் கதாநாயகி குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “தலைவர் 171” திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். ஆனால் ஸ்ருதிஹாசன் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். ஒரு வேளை ரஜினிகாந்திற்கு மகளாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் இணைந்து “இனிமேல்” என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பின் காரணமாகதான் ஸ்ருதிஹாசன் “தலைவர் 171” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.