Connect with us

CINEMA

அஜித்துடன் தன் பெயரை இணைத்து வந்த செய்தி… கடுப்பில் பத்திரிகையாளர்களுக்கு போன் போட்ட விஜய்.. நடந்து என்ன..?

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அஜித் மற்றும் விஜயின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவது வழக்கம்தான். இது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் எப்போதுமே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்கின்றனர். விஜய் முயல் வேகத்தில் செல்லும்போது அஜித் ஆமை வேகத்தில் நகர்வது எந்த விதத்தில் நியாயம் என்று அஜித்தின் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். அதாவது துணிவு படம் வெளியான போது விஜயின் வாரிசு திரைப்படம் வெளியானது. ஆனால் வாரிசு படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியானது.

   

அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கம் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தந்தை மற்றும் மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கின்றார். அதே சமயம் இதில் 3d vfx டெக்னாலஜி பயன்படுத்தப்படுவதால் அதற்காக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் வரை விஜய் சென்று வந்தார். இப்படி மின்னல் வேகத்தில் விஜய் சென்று கொண்டிருக்கும்போது அவருடைய போட்டி நடிகரான அஜித் மட்டும் விடாமுயற்சி திரைப்படத்தின் அறிவிப்பை மட்டும் வெளியிட்டு படப்பிடிப்பை இப்போது தான் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் அஜித் மற்றும் விஜய் என்று தான் எழுதி வந்துள்ளனர். இதனை கவனித்த விஜய் ஒரு முறை சில முக்கிய பத்திரிக்கையாளர்களை தன்னுடைய படப்பிடிப்புக்கு அழைத்து இனி அஜித் – விஜய் என்ற எழுதாதீர்கள். விஜய் – அஜித் என்று என்னுடைய பெயரை முன்னாடி எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஏனென்றால் முதலில் வரும் பெயருக்கு எப்போதுமே மவுசு அதிகம் தான். இதனால் தன்னுடைய பெயர் முன்னாள் வர வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.

 

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top