போதும் நிறுத்துங்க, ஏன் எங்க போனாலும் இதையே கேக்குறீங்க… முன்னாள் கணவர் சாண்டி பற்றி கடுப்பான காஜல்..!!

By Nanthini on மார்கழி 4, 2023

Spread the love

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் காஜல் பசுபதி. அதனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் முதலில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து சிங்கம், கோ, மௌனகுரு மற்றும் இரும்பு குதிரை உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காலம் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இருவரின் விவாகரத்திற்கு பிறகு சாண்டி வேறொரு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகளும் இருக்கின்றனர். ஆனால் சாண்டியை திரிந்த காஜல் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறார்.

   

 

அது மட்டுமல்லாமல் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டி மற்றும் அவரின் குடும்பத்துடன் நல்ல தோழியாக இருந்து வருகிறார்.மேலும் சாண்டியை பிரிந்தாலும் இன்னும் அவர் நினைவாக கையில் போட்ட டேட்டுவை மட்டும் நீக்காமல் அப்படியே உள்ளார் காஜல் பசுபதி. இந்த நிலையில் காஜல் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் சாண்டி குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எங்களுக்குள் எதுவும் கிடையாது, ஏன் எங்கு சென்றாலும் அவரைப் பற்றிய கேட்கிறீர்கள். என் கையில் இருக்கும் டாட்டூவை அழிக்க நான் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அதற்கு சரியான நேரம் தான் கிடைக்கவில்லை. விரைவில் இந்த டாட்டூவை நான் அழித்து விடுவேன் என்று காஜல் மனம் திறந்து பேசியுள்ளார்.

https://www.youtube.com/shorts/j1fRgJVJE7A?feature=share