மறுபடியும் முதல்ல இருந்தா..? முடியலடா சாமி.. தளபதி விஜயின் 69-வது படத்தை எடுக்கப் போவது இவர்தானா..?

By Priya Ram

Published on:

பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ஆல் டைம் படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, யோகி பாபு, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

   

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் கேரளாவில் கோட் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. இதனால் விஜயை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். நடிகர் விஜய் தனது ரசிகர்களிடம் பேசிய வீடியோ காலம் சமூக வலைதளத்தில் வைரலானது.

தனது 69-ஆவது படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியையும் தொடங்கினார். இதற்கிடையில் விஜயின் 69-வது படத்தை இயக்கப் போவது யார் என பல்வேறு கேள்விகள் எழுந்தது.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் விஜயின் 69-ஆவது படத்தை இயக்க உள்ளதாகவும், அதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

author avatar
Priya Ram