பிரபல நடிகைக்கான பிரியங்கா மோகன் ஒந்த் கத்தே ஹெல்லா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். கடந்த 2021-ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமானார்.
இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அவரது நடிப்பும் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.
பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்தில் நடித்தார். கடைசியாக பிரியங்கா மோகன் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்ததால் பிரியங்கா பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இதுவரை பிரியங்கா மோகன் ஹோம்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் தற்போது மாடர்ன் டிரஸ்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.