கருப்பு பணம் பாலாவால் வெள்ளை பணமாகிறது ; பரபரப்பை கிளப்பிய செய்யாறு பாலு

By Deepika on மார்ச் 25, 2024

Spread the love

விஜய் டிவி கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பாலா. இவரை பாலா என்று சொன்னால் தான் மக்களுக்கு டெஹ்ரியும். தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பாலா கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் பேவரைட்டாக மாறுகிறார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இன்னும் புகழின் உச்சிக்கே இவர் சென்று விட்டார்.

KPY Bala gifts bike

இருந்தாலும் இன்று ஆவர் ட்ரெண்டிங்கில் இருப்பதற்கு காரணம் அவர் செய்யும் தானம் தான். தான் டிவியில் சம்பாதிக்கும் பணத்தை ஏழை மக்களுக்கு வாரி வழங்கி வருகிறார் பாலா. இதுவரை ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். மேல்மருவத்தூரில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஒரு இளைஞருக்கு பைக் பரிசளித்துள்ளார். சென்னையில் சில மாதங்களுக்கு முன்னாள் வெள்ளம் வந்தபோது, வீடு வீடாக சென்று அந்த மக்களுக்கு பண உதவி செய்தார்.

   
   

Bala ambulance donation

 

கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்களே அமைதியாக இருக்கும்போது இவர் தான் சம்பாதிக்கும் பணத்தை இப்படி கொடுத்து வருகிறார் என நெட்டிசன்கள் கருத்து சொல்வது உண்டு. பலர் புகழ்ந்தாலும், சிலர் இவரை விமர்சிப்பது உண்டு. இந்தநிலையில் இது அனைத்தும் கருப்பு பணம் பாலா மூலம் இப்படி வெள்ளை பணமாக மாற்றப்படுகிறது என ஒரு செய்தி பரவ தொடங்கியது.

Cheyyaru balu about bala

இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசியுள்ளார் அவர் கூறியதாவது, பாலா இப்படி தானம் செய்வதன் பின்னணியில் சிலர் இருக்கிறார்கள், இது அனைத்தும் கருப்பு பணம் பாலா மூலம் வெள்ளை பணமாக மாற்றப்படுகிறது என ஒரு செய்தி வருகிறது அது முற்றிலும் பொய். பாலா மூலம் எல்லாம் அப்படி செய்ய முடியாது, அது கருப்பு பணமும் அல்ல. அவர் லட்சங்களில் சம்பாதிப்பதில் சில ஆயிரங்களை தான் தானம் செய்கிறார். இதை புரிந்து கொள்ள வேண்டும், தேவையில்லாமல் அவதூறு பரப்பாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார் செய்யாறு பாலு.