தமிழ் சினிமாவில் தன்னுடைய இயல்பான நடிப்பால் பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருபவர் தான் நடிகர் விதார்த். 2001 முதல் சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் திருவண்ணாமலை திரைப்படத்தின் மூலமாக வில்லன் நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர் முதன் முதலில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது என்று கூறலாம். குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக இவர் நடித்த அஞ்சாமை, ஆயிரம் பொற்காசுகள், குரங்கு பொம்மை மற்றும் அன்பளிப்பு போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்தது.

படங்களில் நடிப்பதை தாண்டி தற்போது வெப் சீரிஸ்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். கடந்த வருடம் டெவில் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சினிமாவில் களமிறங்கி 15 வருடங்களுக்கு மேலான விதார்த் தனது சொந்த உழைப்பில் BMW சொகுசு காரை தனது குடும்பத்தோடு சென்று வாங்கியுள்ளார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
