சென்னை போரூர் அடுத்த கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜ் கண்ணன். 47 வயதான இவர் தொழிலதிபராக இருக்கிறார். பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ரிஹானா பேகம் சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும், சின்ன திரையிலும் அவ்வப்போது பரபரப்பாக பேட்டி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் ராஜ் கண்ணன் நேற்று முன்தினம் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தனக்கு தெரிந்த நண்பர் மூலமாக சீரியல் நடிகை ரிஹானா பேகம் எனக்கு அறிமுகமானார். பிறகு அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறினார். கணவரை விவகாரத்தை செய்து விட்டதாக கூறியதால் நட்பாக பழகி வந்த நிலையில் காதலராக மாறியதால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இதனை அடுத்து அவருடைய வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தேன். பின்னர் அவர்களது உறவினர்கள் முன்னிலையில் ரிஹானா பேகத்தை தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன்.

இந்த நிலையில் தான் சினிமா துறையில் பணிபுரிவதால் அடிக்கடி வெளியூர் சென்று தங்க வேண்டி இருப்பதாக கூறினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணத்திற்கு முன்பாகவே அவருக்கு தேவையான பல லட்சங்கள் செலவு செய்து பொருட்கள் வாங்கி கொடுப்பது மட்டுமின்றி பணமாகவும் 20 லட்சம் வரை கொடுத்திருக்கிறேன். பிறகுதான் ரிஹானா பேகம் முதல் கணவரை விவகாரத்து செய்யாமல் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி மோசடி செய்ததோடு 20 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. எனவே ரிஹானா பேகத்தின் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் விசாரணைக்காக நேற்று காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் ரிஹானா பேகம் ஆஜராகவில்லை. இதனை அடுத்து ஆஜரான ராஜ் கண்ணன் அளித்த பேட்டியில், தன்னை திருமணம் செய்து ரிஹானா பேகம் மோசடி செய்து விட்டதாகவும், திருமண முடிந்த கையோடு இதுபோன்று தன்னை அச்சுறுத்தி மிரட்டி வந்ததாகவும் சினிமா துறையில் இருந்து வருவதாகவும் என்னை மட்டுமின்றி கோவையிலும் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரிடம் நிலம், கார் ஆகியவற்றை வாங்கி இருப்பதாகவும் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்” என்றும் கூறியுள்ளார்.
