நடிகர் அர்ஜூன் நடித்த பல படங்களில் அவருடன் நடித்தவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் கூறியதாவது, அர்ஜூன் சாரை பற்றி ஒண்ணு சொல்லியே ஆகணும். அவர் படத்துல முதல்ல நடிக்கும் போது சம்பளம் பேசுவேன். எங்க ரெண்டு பேருக்கும் நல்லா பழக்கம் ஆனதுக்கு அப்புறம் நான் அவர்கிட்ட சம்பளம் பேச மாட்டேன். அர்ஜூன் சார் படமா? ஓகே என்ன சம்பளம் இருந்தாலும் சரின்னு சொல்லிடுவேன்.
ஒரு படத்துல எனக்கு அதிகமா சம்பளம் கொடுத்துட்டார். நான் அவர்கிட்ட சார் எனக்கு சம்பளம் அதிகமா வந்து இருக்குதுன்னு சொன்னேன். அதுக்கு அவர், உங்களுக்கு எவ்வளவு வேணுமோ அதை எடுத்துக்கோங்க. மிச்சத்தை சின்ன நடிகர்களுக்கு கொடுத்துடுங்கன்னு சொன்னார். அப்புறம், மூர்த்தி சார் உங்களுக்கு எப்போது பணம் வேணும்னாலும் தயங்காமல் கேளுங்கன்னு சொல்லுவார். அவ்வளவு நல்ல மனுஷன் அவர் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியிருக்கிறார்.
