Actor Vivek

இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலே… நடிகர் விவேக் செஞ்ச அந்த விஷயம்… பிரபல காமெடி நடிகர் சொன்ன தகவல்!

By Elango on மாசி 17, 2026

Spread the love

சினிமாவில் தனது காமெடி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். தனது காமெடி வாயிலாக நல்ல சமூக கருத்துகளை அவர் வெளிப்படுத்தியதால் சின்ன கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டார். அதே போல் பல படங்களில் காமெடி நடிகராக இருந்தவர் குமரிமுத்து. மறைந்த நடிகர் குமரிமுத்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் நடிகர் விவேக் குறித்து பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, என்னோட கடைசி பொண்ணுக்கு கல்யாணம். என்னிடம் காசு இல்லே. ரொம்பவும் சிரமத்துல இருந்தேன்.

அப்போ தம்பி விவேக் கிட்ட போய் சிலோன்ல நாடகம் பண்ண கூப்பிடுறாங்க. போனால் ஒரு ஐம்பதாயிரம் கிடைக்கும். என் பொண்ணு கல்யாணத்துக்கு உதவும் என்று சொன்னேன். எனக்கு எவ்வளவு கிடைக்கும்ன்னு கேட்டார். ரெண்டு லட்சம் கொடுப்பாங்கன்னு சொன்னேன். அவரும் சிலோன் வந்துட்டார். அந்த ஷோ முடிஞ்சு எனக்கு ஐம்பதாயிரம் கொடுத்தாங்க. விவேக் தம்பிக்கு 2 லட்சம் கொடுத்தாங்க. அந்த ரெண்டு லட்சத்தை அப்படியே என் கையில கொடுத்து, உங்க பொண்ணு கல்யாணத்தை நன்றாக நடத்துங்கன்னு கொடுத்துட்டார் என்று குமரிமுத்து நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.