தன் காதல் மனைவி ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு அவரின் கணவர் உமாபதி ராமையா சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக, இயக்குனராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தந்தையைப் போலவே இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்தார்.
இவர் தற்போது தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற முடிந்த நிலையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி இருவீட்டா சம்மதத்துடன் உமாபதி ராமையா மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுனனின் திருமணம் கெருகம்பாக்கத்தில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் மிக சிறப்பாக நடந்து முடிந்தது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன. அதைத்தொடர்ந்து சென்னை லீலா பேலஸில் ரிசப்ஷன் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால், பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.
பின்னர் இருவரும் தங்களது நண்பர்கள் உறவினர்களுக்கு பார்ட்டி கொடுத்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதைத் தொடர்ந்து தற்போது உமாபதி ராமையா தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கின்றார். சர்ப்ரைஸ் மச்சி என்கின்ற ஆர்கனைசர் மூலமாக வாகனத்தில் செல்லும்போது பலரும் வந்து பூ கொடுக்கும் படி செய்து இருக்கின்றார். அதில் ஷாருக்கான், கிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல பிரபலங்களின் மாஸ்க் போட்ட நபர்கள் பூ கொடுத்து ஐஸ்வர்யாவை சர்ப்ரை செய்திருந்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
View this post on Instagram