இந்தியன் 2 படத்தின் மேக்கப்பில் இருக்கும் வித்தியாசம்.. 4 நாள் ரோப்பிலேயே தொங்கிய கமல்.. ஓப்பனாக பேசிய சங்கர்..!

By Mahalakshmi on ஜூன் 25, 2024

Spread the love

சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் கமலஹாசன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் இயக்குனர் சங்கர்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2.  இந்தியன் திரைப்படத்தின் அடுத்த பாகமாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கின்றது. வரும் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கின்றது, இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

   

   

இந்த விழாவில் நடிகர் கமலஹாசன், அனிருத், நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா இயக்குனர் சங்கர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். indian 2 படத்தின் டிரைலரை பார்த்த பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா விமர்சக வேட்பாளரும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானால் இந்தியன் 2 படத்துக்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறியிருந்தார்கள். இந்த விழா காலை நடைபெற்ற காரணத்தினால் youtube-ல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என கூறப்படுகின்றது.

 

இந்த படத்திற்காக கமலஹாசன் எவ்வளவு மெனக்கெட்டு நடித்துள்ளார் என்பதை சங்கர் பேசி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றார். இந்தியன் படத்திற்கு மேக்கப் போடும்போது திக் மேக்கப்பாக இருந்தது. கமலஹாசன் முகமே ரசிகர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. தற்போது டெக்னாலஜி வளர்ந்திருக்கும் காரணத்தினால் லேசாகவே மேக்கப் போட்டால் கூட கமலஹாசனின் முகம் பளிச்சென தெரியும் அளவுக்கு உள்ளது. கமல் சார் நடிப்பை அனைவருக்கும் நல்லா தெரியும்.

இந்தியன் 2 திரைப்படத்தில் மேக்கப் சரியில்லை என்றும் பார்ப்பதற்கு பிரசாந்தின் அப்பா தியாகராஜன் போடிருப்பதாக வளரும் கிண்டல் செய்து வந்த நிலையில் ஷங்கர் இந்த விளக்கத்தை கொடுத்திருக்கின்றார். மேலும் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஒரு முக்கிய காட்சிகள் கமலஹாசன் அவர்கள் பிராஸ்டடிக் மேக்கப் போட்டுவிட்டு நான்கு மணி நேரம் ரோப்பில் தொங்கியபடியே நடித்திருந்தார். இந்த வயதில் எந்த ஒரு நடிகராலும் எப்படி நடிக்கவே முடியாது என்று சங்கர் கூறி இருக்கின்றார்.

அந்த அளவுக்கு சினிமாவுக்காக டெடிகேஷன் ஆக உழைக்கும் மனிதர் கமல் சார் என்று அவர் பாராட்டி இருக்கின்றார். இந்தியன் டு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிய பிறகு ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெறும் என்று ஷங்கர் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். கமலஹாசன் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த விக்ரம் திரைப்படம் 450 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் ஆயிரம் கோடியை தொடுமா என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.