தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவள் தான் நடிகர் தியாகு. வயலின் வித்துவான் கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளையின் பேரன் தான் தியாகு. டி.ராஜேந்திரன் நெருங்கிய நண்பரான இவர் ஒரு தலை ராகம் திரைப்படம் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் இவர் காமெடி மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சினிமா துறையில் பங்காற்றி வருகின்றார். பல்வேறு படங்களில் வில்லன், குணச்சித்திரம் மற்றும் காமெடி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்த பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

டி ராஜேந்தர் போலவே இவருக்கு நெருங்கிய நண்பர் என்றால் அது விஜயகாந்த் தான். பல பெரிய நடிகர்களுடன் நெருக்கமாக பழகக் கூடியவர். சினிமாவைப் போல அரசியலிலும் இவர் பல வருடங்கள் பணியாற்றியுள்ளார். இவர் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக திமுகவில் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இணைந்தார். இவருடைய மேடைப்பேச்சுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவர் திமுகவில் இருந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது அதிமுக பற்றியும் அம்மா ஜெயலலிதா பற்றியும் தரகுறைவாக பேசி உள்ளார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இரவோடு இரவாக போலீசார் இவரை கைது செய்து விட்டனர். இரவு நேரம் என்பதால் இவருக்கு உதவ அந்த சமயத்தில் திமுகவினர் யாரும் வரவில்லை. உடனே இது குறித்து தியாகு விஜயகாந்த் தகவல் தெரிவித்த நிலையில் இரவு ஒரு மணிக்கு ஓடோடி வந்த விஜயகாந்த் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் பேசி தியாகுவை வெளியே எடுத்தார். இந்த சம்பவத்தை தியாகம் பல பேட்டிகளில் கண்ணீர் மல்க கூறியுள்ளார். விஜயகாந்தை வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு நெருங்கிய நண்பரான தியாகு விஜயகாந்த் இறந்த சமயத்தில் கூட மிகவும் உடைந்து போனார்.
